திருப்போரூர் அருகே தண்டலம் பகுதியில் சுரேந்திரன் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த பிரியங்கா (27) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள். அதாவது சுரேந்திரனின் தாயும் பிரியங்காவின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள். இதனால் பிரியங்கா மற்றும் சுரேந்திரன் அண்ணன் தங்கை உறவுமுறை.
ஆனால் முறை தவறி அவர்கள் காதலித்த நிலையில் இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் பிரியங்கா கர்ப்பமானார். கர்ப்பத்தை காரணம் காட்டி குடும்பத்தினரிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவர்கள் கேட்டு நிலையில் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் எனவும் இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பிரியங்காவுக்கு எட்டு மாதம் ஆனதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நிலையில் கடைசியில் சுரேந்திரன் மற்றும் பிரியங்கா இருவரும் ஒரு பம்பு செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாக இருவரும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் தேடிய போது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
