சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(23) என்ற மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி கணவரை விட்டு பிரிந்து 4 கடந்த ஆண்டுகளாக சேலத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இதனால் பழனிசாமி ஜெயலட்சுமி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 15-ஆம் தேதி ஆகாஷ் தனது தந்தை பழனிச்சாமி, சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்தார். பின்னர் மூன்று சாக்கு முட்டைகளில் அவர்களது உடல் பாகங்களை கட்டி ஏரியில் வீசினார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் ஆகாஷை பிடித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஜெயலட்சுமி தனது முதல் கணவர் மூலம் பிறந்த 18 வயது மகளையும் தன்னுடன் தங்க வைத்தார். வீட்டில் தனியாக இருந்த போது பழனிச்சாமி அவ்வபோது மகள் உறவு முறை கொண்ட அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதற்கு ஜெயலட்சுமிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனை அறிந்து கோபமடைந்த ஆகாஷ் தனது தந்தையையும், சித்தியையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து ஆகாஷை மிரட்டியதால், கோபத்தில் ஆகாஷ் பழனிச்சாமி, ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது