இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நகைக்கடன் வழங்கும் விதிமுறைகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கத்தை வைத்து மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி வெள்ளி ஆபரணங்களை வைத்தும் கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​புதிய விதிமுறைகளின்படி, ஒரு நபர் 10 கிலோ வரை வெள்ளி ஆபரணங்களை அடமானம் வைத்து கடன் பெற முடியும். வெள்ளி நாணயங்களாக இருந்தால் அரை கிலோ வரை அனுமதிக்கப்படும். மேலும், வெள்ளியின் அன்றைய சந்தை மதிப்பில் 85% வரை கடனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.