மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மளிகைக் கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், எவ்வித பயமும் இன்றி அங்கிருந்த உப்ப மூட்டைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றார்.
பொதுவாக தங்கம் அல்லது பணத்தைத் திருடும் திருடர்களுக்கு மத்தியில், மலிவான விலையில் கிடைக்கும் உப்பை ஒருவன் திருடியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதில் அந்த நபர் மிகவும் சாதாரணமாக வந்து உப்பைத் திருடிச் செல்வது தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து திருடனைத் தேடி வருகின்றனர். சாதாரண உப்பு கூட பாதுகாப்பாக இல்லாதது குறித்து உள்ளூர் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிலர் இதை நகைச்சுவையாகப் பார்த்தாலும், நகரின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது.
