குஜராத் மாநிலம் சூரத்தில், டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை 49 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலை அறிந்த சிறுமியின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் ஆத்திரமடைந்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குற்றவாளியின் இந்த கீழ்த்தரமான செயல் பொதுமக்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது, இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆவேசமடைந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

“>

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறுமிக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை எதிர்த்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவான நீதி கோரியும் சூரத்தில் வெடித்துள்ள இந்தப் போராட்டம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.