உலகளவில் சமூக வலைதளப் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்திய அறிக்கைபடி, சமூக வலைதளப் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 4.8 பில்லியனாக அறிவிக்கப்பட்டது. எனினும் சில பிரபலமான தளங்கள் தொடர்ந்து பயனர்களின் ஆதரவை இழக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பயனர்கள் டெலிட் செய்த செயலிகளில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் TRG Date Centre தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் பயனர்கள் நடத்தை தொடர்பாக வெளியிட்டு ஆய்வு அறிக்கையில் உலகம் முழுவதும் 450 கோடி பேர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அதில் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டரை மணி நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.