X செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரைவில் கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரை வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்ட இவர் அதனை X என்று பெயர் மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பல மாற்றங்களையும் செய்துவரும் நிலையில் தற்போது பண பரிமாற்றம் செய்வதற்கான வசதியையும் கொண்டு வரவும் முயற்சித்து வருகின்றார். இது குறித்து பேசிய அவர், இதற்கான உரிமத்திற்கு அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு அடுத்த ஆண்டு முதல் x செயலியில் பணம் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.