விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். இந்நிலையில் சிவாங்கி காரில் வந்து கொண்டிருக்கும்போது நடிகர் கூல் சுரேஷ் அவரை மடக்கி பிடித்து டேமேஜ் செய்துள்ளார்.

சமீபத்தில் கூல் சுரேஷ் டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் நேற்று வெளியானது. இதற்காக பிரமோஷன் வேளையில் சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டிருந்த நிலையில் அப்போது காரில் சீட் பெல்ட் அணியாத சிவாங்கியை மடக்கி பிடித்து மன்னிப்பு கேட்க கூறியுள்ளார். உடனே பதில் போன சிவாங்கி ஒரு வழியாக எஸ்கேப் ஆகிய போது மீண்டும் அவரிடம் சென்று கூல் சுரேஷ் டிடி ரிட்டன்ஸ் பட போஸ்டரை காட்டி டிடி நான் டிரிங்க் அண்ட் டிரைவ் , குடிச்சிட்டு வண்டி ஓட்டாத சிவாஜிின்னு சொல்லி நடுரோட்டில் டேமேஜ் செய்துள்ளார்.