விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்போது லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் எலும்பும் தோலுமாக உள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவா இப்படி ஆகிவிட்டார் என கூறி வருகின்றனர்…