பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், பொது இடங்களில் நடக்கும் தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கொல்கத்தாவில் அரங்கேறிய ஒரு சம்பவம், அநாகரிகமாக நடக்கும் சமூக விரோதிகளுக்குச் அடியாக விழுந்துள்ளது.

பயந்து நடுங்குவது தான் பெண்கள் என்று நினைக்கும் சில காமக் கொடூரர்களுக்கு மத்தியில், இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பகுதியில், பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது ஸ்கூட்டியில் தனியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆகாஷ் கோஷ் என்ற டெலிவரி ஊழியர், அந்தப் பெண்ணை அநாகரிகமான முறையில் நோட்டமிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்தப் பெண்ணின் ஸ்கூட்டிக்கு மிக அருகில் சென்று, ஆபாசமான சைகைகளைச் செய்தும், முகம் சுளிக்க வைக்கும் இழிவான கருத்துக்களைக் கூறியும் அத்துமீறித் துன்புறுத்த முயன்றுள்ளார். தனியாகச் செல்லும் பெண் என்பதால் பயந்து கொண்டு சத்தமில்லாமல் தப்பித்து ஓடிவிடுவார் என்று அந்த டெலிவரி ஊழியர் தப்புக் கணக்கு போட்டுள்ளார். ஆனால், அங்குதான் அந்த ஆசாமிக்கு மிகப்பெரிய மரண அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பெண் சற்றும் பயப்படாமல், உடனடியாக தனது ஸ்கூட்டியைச் சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதே வேகத்தில் அந்த டெலிவரி பாயின் மோட்டார் சைக்கிளையும் மறித்து, யாரும் எதிர்பாராத விதமாக அவனது சட்டைக் காலரைப் பலமாகப் பிடித்து நடுரோட்டிலேயே வச்சு வெளுத்து வாங்கினார். அவனது பிடியை ஒரு நொடி கூட தளர்த்தாமல், காலரைப் பிடித்தபடியே நேராக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார்.

காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போதுதான், அந்த ஆசாமியின் தொடை நடுங்கத் தொடங்கியது. ஏனெனில், அவர் வம்பு இழுத்த அந்தப் பெண் ஒரு சாதாரணக் குடிமகள் அல்ல, சீருடை அணியாமல் சாதாரண உடையில் வந்த பெண் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. உடனடியாக ஆகாஷ் கோஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளினர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Humans of Bombay (@officialhumansofbombay)

“>

இந்த விஷயம் அறிந்த சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனமும், தங்கள் கொள்கையின்படி அவரை உடனடியாக வேலையை விட்டு அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த தைரியமான அதிரடி நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.