ரயிலில் ஆலு வடை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியின் கையில் கட்டுகட்டாகப் பணக் குவியல்கள் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த சக பயணிகள் மட்டுமன்றி, நெட்டிசன்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மேலும் சாதாரணமாக வடை விற்கும் ஒருவரிடம் இவ்வளவு பெரிய தொகையா என்று வாயடைத்துப் போன மக்கள், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களின் நகைச்சுவையான பாணியில் கமெண்ட்டுகளைத் தட்டிவிட்டு வேடிக்கை காட்டி வருகின்றனர்.

“>

இந்நிலையில் “இதோ, அமலாக்கத்துறை  உங்கள் இடத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது போல!” என்றும், “ஐடி ரெய்டு நடத்த வேண்டிய இடம் இதுதான்” என்றும் கிண்டலாகக் கூறி மீம்ஸ்களைப் பறக்கவிடுகின்றனர். ஒரு எளிய வடை வியாபாரியின் கையில் இருந்த பண மூட்டை, தற்போது இணையவாசிகளுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.