பஞ்சாபிலிருந்து இமாச்சலப் பிரதேசம் நோக்கி சென்ற எண்ணெய் டேங்கர் ஒன்று ஸ்வர்காட் பகுதியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. அந்த டேங்கரில் இருந்து விசித்திரமான சத்தங்கள் மற்றும் துர்நாற்றம் வந்ததை அறிந்த போலீசார் உடனடியாக அதன் கதவை திறந்தனர்.
அதில் மூன்று பசுக்கள் மற்றும் ஐந்து காளைகள் உயிருடன் மோசமான நிலையில் இருந்ததுடன், ஒரு காளை இறந்து கிடந்தது. இந்த காட்சியால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். டேங்கரின் ஓட்டுநரும், கடத்தல்காரர் ஒருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
तस्करों ने गोतस्करी के लिए निकाला नया तरीका… पुष्पा फ़िल्म चंदन तस्करी के लिए दूध के टेंकर का उपयोग किया था और हिमाचल में ईंधन के टेंकर का हो रहा है।
बिलासपुर पुलिस ने स्वारघाट में गोवंश लेकर जा रहे टेंकर को पकड़ा। टेंकर को काटकर उसमें दरवाजा बनाकर गोवंश को डाला गया था। pic.twitter.com/M4ACFktgka
— Munish Gariya (@ManishGariya2) July 24, 2025
தெளிவாக திட்டமிடப்பட்ட இந்த சட்டவிரோத வணிகத்தில், டேங்கருக்குள் தனிச்சிறப்பு கதவு அமைக்கப்பட்டு, அதன் பின்னால் கால்நடைகள் அடைக்கப்பட்டிருந்தது. டேங்கரில் ஹரியானா மாநில எண் தகடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஸ்வர்காட் காவல் நிலைய பொறுப்பாளர் ரூப் லால் கதானியா, இது வெறும் விலங்குகள் மீது துன்புறுத்தல் அல்ல, திட்டமிட்ட குற்றச்செயல் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் தெரிவித்தார்.
உயிருடன் இருந்த கால்நடைகள் உடனடியாக அருகிலுள்ள மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூடப்பட்ட டேங்கரில் நீண்ட நேரம் மூச்சுத் திணறலால் அவற்றின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
