அதிமுக கட்சியிலிருந்து கிட்டதட்ட 26 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக டிடிவி தினகரன் பரபரப்பு கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் பேசியதாவது, அதிமுக பெயரை கூட சொல்லாமல் இளக்காரமாக பேசியதோடு அதிமுகவை ஊழல் கட்சி என்றும் கூறினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுப்பது எப்படி அறமாகும். எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் என்னுடைய நண்பர்கள்தான். அவர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் இல்லை எனில் கண்டிப்பாக எம்எல்ஏ பதவி பறிபோய் ரோட்டில் தான் இருக்க வேண்டும்.
நமக்குள் வருத்தங்கள் இருந்தாலும் விஜயை ஆதரிப்பது எப்படி அறமாக இருக்க முடியும்.. மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு வேலை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஒருவேளை அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் கண்டிப்பாக குதிரை பேரும் நடந்திருப்பது உறுதியாகி விடுவதோடு நாங்கள் சிபிஐ விசாரணைக்கு கோருவோம். சிபு சோரனுக்கு அன்று என்ன நடந்ததோ அதுதான் முதலமைச்சர் விஜய்க்கும் நடக்கும். மேலும் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கும் கொறோடாவே சட்டப்படி செல்லுபடி ஆகும் என்றார்.
