பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது ஒரு சூட்கேஸை அடுக்கி வைக்க ‘ஸ்நாபிட்’ எனும் செயலி மூலம் ஒரு உதவியாளரை வீட்டிற்கு வரவழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடு சென்று திரும்பிய அந்தப் பெண், களைப்பு காரணமாகச் சுயமாக வேலை செய்ய விரும்பாமல் இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன், “ஒரு சூட்கேஸைத் திறக்கக் கூடவா ஆள் தேவை? இப்போது யார் சோம்பேறி?” என்று கிண்டலாகக் கேட்டு அந்த வீடியோவைப் பகிர, அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய அவசர உலகில், வீட்டு வேலைகளையும் சிறு பணிகளையும் செய்வதற்குத் தொழில்நுட்பம் எந்த அளவிற்குத் துணை நிற்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“>

இந்நிலையில் ‘ஸ்நாபிட்’ போன்ற செயலிகள் மூலம் எளிமையான வேலைகளுக்கும் ஆட்களைப் பணியமர்த்தும் கலாச்சாரம் பெங்களூரு போன்ற நகரங்களில் பெருகி வருவதை இது காட்டுகிறது. சிலர் இதை ‘சோம்பேறித்தனம்’ என்று விமர்சித்தாலும், மற்றவர்கள் நேரத்தைச் சேமிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது போன்ற நவீன சேவைகள் அவசியம் என்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.