அரசுப் பள்ளிகள் என்றாலே பாழடைந்த கட்டடங்கள் என்ற பிம்பத்தை உடைத்து, அசாம் அரசு செய்துள்ள இந்தச் சாதனை இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்.
அசாம் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில், பல பள்ளிகள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
This is New government school in Assam
Taxpayers hard earned money should be spent like this pic.twitter.com/gLekHZEStY
— Hindutva Knight (@HPhobiaWatch) January 23, 2026
அந்தப் பள்ளி கட்டடம், கண்ணைக் கவரும் வண்ணம் மற்றும் நவீன வசதிகளுடன் ஏதோ ஒரு ஐடி நிறுவனத்தின் அலுவலகம் போலவோ அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் போலவோ காட்சியளிக்கிறது.
இதனைப் பார்த்த பலரும், “உண்மையிலேயே இது அசாமில் உள்ள பள்ளிதானா? என்னால் நம்பவே முடியவில்லை” எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, “இது நிஜமான புகைப்படம் கிடையாது, யாரோ AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கிய கற்பனைப் படம்” (Mujhe toh AI lag raha hai) என்று விவாதிக்கும் அளவிற்கு அந்தப் பள்ளி பிரம்மாண்டமாக உள்ளது. கல்வியில் புரட்சியை ஏற்படுத்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
