இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று ஈரான் மீது நடத்திய சரமாரி தாக்குதலில், அந்நாட்டின் மிக முக்கியமான எட்டு பாலங்கள் மற்றும் ரயில்வே வழித்தடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
ஈரானிய ராணுவம் ஆயுதங்களையும் வீரர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தும் தேஹ்ரான், கரஜ், தப்ரிஸ் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பாலங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் “பயங்கரவாத ஆட்சி” அடியோடு நசுக்கப்பட்டு வருவதாகவும், ஈரானிய விமானப்படை தளங்களில் இருந்த டஜன் கணக்கான ஹெலிகாப்டர்கள் மற்றும் சரக்கு விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலால் ஈரானின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இரவு 9 மணி வரை ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
🎯STRUCK: 8 bridge segments utilized by the Iranian terror regime for transporting weapons & military equipment.
The IDF struck 8 bridge segments in several areas, including Tehran, Karaj, Tabriz, Kashan, & Qom. Prior to the strike, several steps were taken to mitigate harm to… pic.twitter.com/kDzkRhMFTD
— Israel Defense Forces (@IDF) April 7, 2026
“>
ஈஸ்பஹான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஈரானின் 130-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாகக் கூறியுள்ள இஸ்ரேல், இந்தத் தாக்குதல் ஈரானிய மக்களுக்கு எதிரானது அல்ல, கடந்த 47 ஆண்டுகளாக அவர்களை ஒடுக்கி வரும் ஆட்சிக்கு எதிரானது என்று விளக்கம் அளித்துள்ளது.
