டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை வருகின்ற மார்ச் 19ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 37 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில் அரை இறுதி போட்டிகள் உட்பட 13 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை tickets t20worldcup.com என்ற இணையதளத்தில் காலை 10 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.