2026 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடிய இந்தியாவிற்கு, மொத்தப் பரிசுத் தொகையான சுமார் 94 கோடி ரூபாய் பெரும் பங்காக 2.63 மில்லியன் டாலர் சுமார் 25 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைத் தக்கவைத்ததோடு, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது. இந்தத் தொடரில் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணிக்கு 1.42 மில்லியன் டாலர் (சுமார் 13 கோடி ரூபாய்) பரிசுத்தொகையாகக் கிடைத்துள்ளது.
அதேபோல் அரையிறுதி வரை முன்னேறிய தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு முறையே 1.05 மில்லியன் டாலர் மற்றும் 9.74 லட்சம் டாலர் வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கும் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப நிதி வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிப்பதன் மூலம் உலகளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த முறை பரிசுத்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
