தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான வார்த்தை போர் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் வேளையில், தற்போதைய புதிய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் விஜய் அவர்களின் பேச்சுவார்த்தை பாணியை இயக்குநர் டி.ராஜேந்தருடன் ஒப்பிட்டு மிகக் காரசாரமாக விமரித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் மற்றும் பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி, தமிழகத்தில் தற்போது எதைக் கேட்டாலும் அது ‘திமுக செய்கின்ற சதி’ என்று ஆளுங்கட்சியினர் பழியைத் தூக்கிப் போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் அவர்கள் மேடைகளில் பேசும்போது தூர சக்தி, ஓர சக்தி, பார சக்தி என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் பாணியில் ரைமிங்காக டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவர் கிண்டலாகச் சாடியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரைத் தமிழக மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் தேர்ந்தெடுத்து விட்டார்கள், மக்களின் அந்த முடிவை நாம் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் விரக்தியுடனும் ஆவேசத்துடனும் பேசியுள்ளார்.
புதிய அரசின் செயல்பாடுகள் குறித்தும், முதலமைச்சரின் பேச்சுவார்த்தை ஸ்டைல் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள இந்த அதிரடியான ரைமிங் விமர்சனம், தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் செம வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
