தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நாளுக்கு நாள் முற்றி வரும் வேளையில், தற்போதைய புதிய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைக் கடுமையாகச் சாடிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.

முதலமைச்சர் விஜய் அவர்கள் கருப்பு கோட் அணிவது தந்தை பெரியாரின் நினைவாக என்று கூறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய உதயநிதி, “இதைவிட ஒரு பெரிய உருட்டு ஏதாவது இருக்கிறதா?” என்று மிக ஓப்பனாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கோட் சூட் போடுவதெல்லாம் இங்கு யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது என்று தெரிவித்த உதயநிதி, ஆட்சி மற்றும் நிர்வாக ரீதியாக எல்லா விதத்திலும் நீங்கள் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் இங்கு உண்மையான பிரச்சனை என்று மிக ஆக்ரோஷமாக விமர்சித்துள்ளார்.

புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள மிக முக்கியமான குற்றச்சாட்டாகப் பார்க்கப்படுவதோடு, தமிழக அரசியல் மேடைகளில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.