பெங்களூருவில் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) பாஜக-வுடன் கைகோர்த்து, அதிகாரப்பூர்வமாக என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணைந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, சென்னையில் இன்னொரு ‘பகீர்’ கிளம்பியுள்ளது. ஓபிஎஸ்-ஸின் மகன் ரவீந்திரநாத், பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் நிலையில், டிடிவியும் உள்ளே வந்துவிட்டதால், ஓபிஎஸ் தரப்பு ஓரங்கட்டப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்தத் திடீர் சந்திப்பு “நாங்களும் ரேஸ்லதான் இருக்கோம்” என்பதை உறுதிப்படுத்துவது போல அமைந்திருக்கிறது!

​டிடிவி தினகரன் ஒரு பக்கம் டெல்லி தலைவர்களைச் சந்தித்து சீட் மேட்டரை இறுதி செய்து வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பும் பாஜக மேலிடத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பது பல யூகங்களைக் கிளப்பியுள்ளது. ஒருவேளை பாஜக இபிஎஸ், டிடிவி மற்றும் ஓபிஎஸ் என அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப் பார்க்கிறதா? அல்லது ஓபிஎஸ் தரப்புக்குத் தனிப்பாதை ஒதுக்கப்படுமா? என்பதுதான் இப்போதைய மர்மம். எது எப்படியோ, இன்னும் சில தினங்களில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒரு ‘மெகா’ அறிவிப்பு வரும்னு அரசியல் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன!