தமிழக வெற்றி கழகத்தின் (TVK) முக்கியத் தூண்களாக இருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கும், செங்கோட்டையனுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு என்றும், இருவருக்கும் இடையே பனிப்போர் நடப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி செம வைரலாகிக் கொண்டிருந்தது. இது தளபதி விஜய்யின் தொண்டர்களிடையே கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு இப்போது புஸ்ஸி ஆனந்த் அவர்கள் செம மாஸாக விளக்கம் அளித்து, எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்!
செங்கோட்டையனுடன் மனக்கசப்பா?
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விளக்கம் #TVK #NAnand #Senkottaiyan #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/sRybPtYmqG
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 21, 2026
”எனக்கும் அண்ணன் செங்கோட்டையனுக்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை. எங்களுக்கிடையே சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை” என்று புஸ்ஸி ஆனந்த் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். “நாங்கள் அனைவரும் எங்கள் தலைவர் தளபதியின் கீழ் பணியாற்றும் சாதாரண தொண்டர்கள்தான். எங்களுக்குள் எந்த ஒரு ஏற்ற இறக்கமும் கிடையாது, பதவிப் போட்டியும் கிடையாது” என்று அவர் கூறியிருப்பது, வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைத்துள்ளது. இதன் மூலம் தவெக-வில் எல்லாரும் ஒண்ணுதான், 2026-ஐ நோக்கி ஒற்றுமையாகப் பயணிக்கிறோம் என்கிற மெசேஜை அவர் ஸ்ட்ராங்காகச் சொல்லியிருக்கிறார்!
