தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பலத்தை நிரூபிக்கும் வகையில், இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒரு மாபெரும் இணைப்பு விழா நடந்தது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 392 முக்கிய நிர்வாகிகள் தங்களை அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைத்துக் கொண்டனர். தவெக-வின் மாநில நிர்வாகிகளான செங்கோட்டையன், என். ஆனந்த், மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. புதுசாக இணைந்தவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து சொல்ல, அந்த இடமே திருவிழா போல காட்சியளித்தது!
சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் தவெக கட்சி இப்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. “நாங்க வெறும் சினிமா கூட்டம் இல்ல, அரசியலிலும் ஒரு வலுவான சக்தி” என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த அடுத்தடுத்த இணைப்புகள் அமைந்துள்ளன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற சீனியர் தலைவர்கள் இப்போது தவெக-வில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால், மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள் வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது!
