உத்தரப்பிரதேச மாநிலத்தில், கல்யாண ஊர்வலத்தில் வைக்கப்பட்ட டிஜே சத்தம் தாங்க முடியாமல் 140 கோழிகள் மாரடைப்பால் உயிரிழந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நடந்த ஒரு திருமண ஊர்வலத்தின் போது, அந்த வழியாக வந்த டிஜே வாகனத்தின் காதை பிளக்கும் சத்தமும் அதிர்வும் அங்கிருந்த கோழிப்பண்ணையில் இருந்த கோழிகளைப் பயங்கரமாக மிரளச் செய்துள்ளது.

இதில் மிரண்டு போன கோழிகள் அடுத்தடுத்து படபடவென துடிதுடித்து செத்துப்போயின. இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் சாபீர் அலி கொடுத்த புகாரின் பேரில், இறந்த கோழிகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், டிஜே சத்தத்தால் ஏற்பட்ட பயமும் மன அழுத்தமும் தாங்க முடியாமல் கோழிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதியானது.

இந்தப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், டிஜே கச்சேரி நடத்திய கவி யாதவ் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனிதர்களுக்கு மட்டும் இல்லாம, விலங்குகளுக்கும் இந்த அதிக சத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பெரிய சாட்சியாக மாறியுள்ளது.