டி.ஜி.பி பதவிகளுக்கான தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசுகள் உரிய நேரத்தில் அனுப்பத் தவறினால், யூபிஎஸ்சி (UPSC) நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தெலங்கானா டி.ஜி.பி நியமன வழக்கில் இந்த முடிவை எடுத்துள்ள நீதிமன்றம், காலதாமதம் செய்யும் மாநிலங்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க யூபிஎஸ்சி-க்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளது.
டி.ஜி.பி போன்ற உயர் பதவிகளில் மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி தற்காலிகமாக அதிகாரிகளை நியமிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி மாநில அரசுகள் டி.ஜி.பி பெயர்களைப் பரிந்துரைப்பதில் மெத்தனம் காட்ட முடியாது என்பதால், காவல்துறை உயர் பதவிகள் நியமனத்தில் இருந்த அரசியல் பிடி தளர்ந்து வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
