தடுப்பூசி செலுத்துதல் குறித்த அனைத்து விவரங்களையும் நிர்வகிக்க மத்திய அரசு U-WIN என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இனி செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசி விவரங்கள் உள்ளிட்டவை இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் உள்ளிட்ட விபரங்களும் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.