காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவரை உடல்நிலை சீராக இருப்பதாகவும் அச்சப்பட வேண்டாம் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.