பயன்பாட்டில் இல்லாத google கணக்குகள் டிசம்பர் ஒன்றிலிருந்து முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் மின்னஞ்சல் மூலமாக கூகுளின் அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும். Google நிறுவனம் கடந்த மே மாதம் இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் google கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 1 முதல் பயன்பாட்டில் இல்லாத google கணக்குகளை முடக்க இருப்பதாகவும் இது தொடர்பான எச்சரிக்கை தகவலை மாற்று ஜிமெயில் மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும் நிறுவனங்கள் பள்ளிகள் போன்றவற்றிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.