கொலம்பியா நாட்டில் ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்ற பத்து வயது சிறுமி நீச்சல் குளத்தில் நீந்தி கொண்டிருந்த போது அந்த நீரில் இருந்த ஒருவகையான அமீபாக்கள் சிறுமியின் மூக்கு வழியாகச் சென்று மூளையில் தொற்று ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சில விசித்திரமான உடல் நல பாதிப்புகளை சந்தித்த அந்த சிறுமி மூன்று வாரங்களாக மரணத்துடன் போராடி வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அமீபிக் என்செபாலிடிஸ் நோய் காரணமாக சிறுமி உயிரிழந்ததாக மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்தனர். எனவே நீச்சல் குளங்கள் மற்றும் தேங்கி நிற்கும் இடங்களில் குளிக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.