ராஜஸ்தானில் ராம்தேவ்ரா கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் சென்ற தம்பதியினர் மீது வேகமாக வந்த டம்பர் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எதிர்பாராத வகையில் நடந்த இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் டம்பரின் அடியில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை அந்த டம்பர் சுமார் 10 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். டம்பர் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவருடன் சென்ற கணவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.அந்த கும்பல் கோபத்தில் அந்த லாரியை தீயை வைத்து எரித்துள்ளனர்.
A woman was killed, and her husband was injured after a speeding truck loaded with concrete ran over their motorcycle in Rajasthan’s Jodhpur. The incident took place on Friday evening.
The woman, identified as Manjesh, was dragged by the out-of-control dumper for around 10… pic.twitter.com/rqYBlhwW5P
— Hate Detector 🔍 (@HateDetectors) September 5, 2026
இந்த விபத்தால் ஆத்திரமடைந்த சிலர் டம்பரைச் சுற்றி திரண்டதாகவும், பின்னர் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. விபத்துக்கான காரணம், டம்பர் ஓட்டுநரின் வேகம் உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்தேவ்ராவில் தரிசனம் முடித்து வீடு திரும்பிய பக்தர்கள் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
