2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 8) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியடைந்தாலும், ஒருபுறம் கவலையும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, முக்கியமான நாக்-அவுட் போட்டிகளில் அகமதாபாத் மைதானம் இந்திய அணிக்கு ராசியில்லாத ஒன்றாகக் கருதப்படுவதால், இறுதிப் போட்டியை மும்பை வான்கடே மைதானத்திற்கு மாற்றக் கோரி ரசிகர்கள் இணையத்தில் மனுக்களை உருவாக்கி வருகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது மும்பையில் நிலவிய உற்சாகமான சூழலே இதற்கு முக்கியக் காரணமாகும். போட்டி நடைபெற உள்ள அகமதாபாத்திற்குச் செல்வதற்கான விமானக் கட்டணங்கள் தற்போது விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளன.

வழக்கமாக மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு ₹3,000 முதல் ₹6,000 வரை இருக்கும் விமான டிக்கெட் விலைகள், மார்ச் 8-ஆம் தேதியன்று ₹7,349 முதல் ₹8,371 வரை 100% அதிகமாக உயர்ந்துள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Scoop with Akshay (@scoopwithakshay)

“>

“அகமதாபாத் ராசி” குறித்த அச்சம் ஒருபுறம் இருந்தாலும், தங்கள் அபிமான அணியை நேரில் கண்டு ரசிக்க ரசிகர்கள் பெரும் பொருட்செலவிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.