சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஒரு தாய், தனது குழந்தைக்கு எனப் பதிவு செய்யப்பட்ட இருக்கையில் காலணியை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுமார் 1,500 முதல் 1,700 ரூபாய் வரை கொடுத்து முன்பதிவு செய்த அந்த இருக்கையில் குழந்தை உட்காராமல், பெற்றோரின் மடியில் அமர்ந்திருப்பதாகவும், அதற்குப் பதில் 100 ரூபாய் மதிப்புள்ள செருப்பு அந்த உயர்ரக இருக்கையில் “சொகுசு பயணம்” செய்வதாகவும் அவர் கிண்டலாகப் பேசியுள்ளார்.
<a href=”http://

“>
நகைச்சுவைக்காகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த வீடியோவைக் கண்ட சமூக வலைதளப் பயனர்கள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை வேடிக்கையாகப் பார்த்தாலும், பலர் அந்தப் பெண்ணின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“ரயிலில் இடம் கிடைக்காமல் பலர் தவிக்கும் போது, இப்படிச் செய்வது முறையல்ல” என்றும், “வசதி இருக்கிறது என்பதற்காகப் பொதுச் சொத்தை இப்படி அலட்சியப்படுத்துவது சரியல்ல” என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

ரயிலில் பொது ஒழுக்கம் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு குறித்த விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் முன்னெடுத்துள்ளது.