கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் (Coimbatore-Nagercoil SF Express), முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இல்லாத பயணிகள் கூட்டமாக ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர், டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) மிகவும் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதெல்லம் மீடியா கண்ணுக்கு தெரியாது போல…
கிளாம்பாக்காத்துக்கு மட்டும் 10 கேமராவோட வருவானுக 😡😡😡 pic.twitter.com/TjCrWZoDJl
— தனி ஒருவன் 🔥🔥🙋🏻♀️⚔️ (@Thaniorvann) January 15, 2026
குறிப்பாக, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அள்ளுவதோடு, பெண்கள் இருக்கும் கோச்சுகளிலும் டிக்கெட் இல்லாதவர்கள் புகுந்து கொண்டு பயணிகளுக்கு மிகுந்த இடைஞ்சல் கொடுப்பதாக அந்தப் பயணி சரமாரியாகக் குற்றம் சாட்டினார். டிக்கெட் எடுத்துவிட்டு நிம்மதியாகப் பயணம் செய்ய முடியாமல், முண்டியடித்துக் கொண்டு நிற்பவர்களால் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை அந்தப் பயணி மிகவும் எதார்த்தமாக அந்தக் காணொளியில் பதிவு செய்துள்ளார்
