டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தங்கள் குடும்பத்துடன் வருகிறார்கள். ஆனால், அங்கு தங்குவதற்குப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், உறைய வைக்கும் கடும் குளிரிலும் அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே திறந்தவெளியிலேயே படுத்து உறங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போர்வைகள் கூட இல்லாமல், பல நோயாளிகள் பிளாஸ்டிக் தாள்களைப் போர்த்திக்கொண்டு சுருண்டு கிடக்கும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சைப் பிழிவதாக உள்ளது.
This will break your heart 🚨
Hundreds of sick people & their families are forced to sleep in open in extreme cold outside AIIMS, Delhi
Most don’t even have blankets, so they wrap themselves in plastic 💔
Welcome to the “4th Largest Economy” pic.twitter.com/fk04qJYepm
— Ankit Mayank (@mr_mayank) January 15, 2026
இது குறித்து அந்தக் காணொளியில் பேசிய பெண் ஒருவர், டெல்லி போன்ற பெரிய நகரத்திற்கு வந்தால் நல்ல வசதிகள் கிடைக்கும் என்று நம்பி வந்ததாகவும், ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். முறையான உணவோ, குடிநீரோ அல்லது தங்குவதற்கு நிம்மதியான இடமோ கிடைக்காமல் ஏழை நோயாளிகள் படும் இந்த அவதி, சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ந்து வரும் வேளையில், எளிய மக்களின் இந்த நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.
