சென்னை: பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹனிவெல், தனது ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள ‘மென்பொருள் பொறியாளர் – I’பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிக்குத் தேர்வாகும் நபர்கள் ‘ஹைபிரிட்’முறையில் பணியாற்றலாம். அதாவது, வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதி அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல், மின்னணுவியல், ஏரோஸ்பேஸ்இன்ஜினியரிங் அல்லது எம்.சி.ஏ ஆகிய துறைகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு அனுபவம் இல்லாத புதியவர்கள் முதல் ஓராண்டு வரை அனுபவம் உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு கோர் ஜாவா,ஜாவா புரோகிராமிங், ஆரக்கிள் டேட்டாபேஸ், பைத்தான் மற்றும் வெப் சர்வீசஸ் போன்ற தொழில்நுட்பங்களில் போதிய புலமை இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏரோஸ்பேஸ் துறை சார்ந்த அனுபவம் மற்றும் DO-200B தரநிலைகள் குறித்த அறிவு கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. இப்பணிக்கான ஊதியம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், நேர்காணலின் போது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேர ஷிப்ட் முறையில் மட்டுமே இயங்கும் இந்தப் பணிக்கு, விருப்பமுள்ளவர்கள் ஹனிவெல் நிறுவனத்தின்அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
