டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபாட்டில்களின் விலையும் உயர்கிறது. அதாவது, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சாதாரண மது வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. அதேசமயம், பிராண்டு வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.80 வரை உயர்த்தப்படுகிறது. இதனால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.