மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் பிப்வேவாடி பகுதியில் பெண் மருத்துவர் ஒருவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதி அவரை நசுக்கிய கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன அதில் வேகமாக வந்த கார் எவ்வித தடையுமின்றி நேரடியாக அந்தப் பெண் மீது ஏறிச் செல்வது பார்ப்போரை உறைய வைக்கும் வகையில் உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிப்வேவாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
View this post on Instagram
“>
மேலும் காரை ஓட்டி வந்த பெண் மருத்துவரிடம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுபோதையில் கார் ஓட்டப்பட்டதா அல்லது கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
