பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை தொடர விரும்புகிறேன் என்றார் PTR.

இந்நிலையில் நிதியமைச்சர் PTR தியாகராசன் கூறியுள்ள விளக்கத்தை திமுக IT பிரிவைத் தவிர வேறு யாரும் நம்பமாட்டார் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது என நிதியமைச்சர் விளக்கமளித்துள்ளதற்கு  பதிலளிக்கும் வகையில் பேசிய அண்ணாமலை, ‘ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப தடுப்பது ஏன்?’ என மற்றொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.