தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான அரசாணை மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் உரிமை தொகை வழங்கும் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சியை வழங்கப்பட்டு வரும் நிலையில் வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கும் பணிகளை வருகின்ற ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடம், எந்தெந்த அட்டைதாரர்கள் எந்தெந்த நாளில் முகாமில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கான எழுத்து பணியை ஜூலை 18ஆம் தேதி தொடங்க வேண்டும் எனவும் முகாம் நடக்கும் இடம் குறித்து ரேஷன் கடைகளில் தமிழில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.