தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு 928 கோடிக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இந்த பொருள்கள் பதுக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் துவரம் பருப்பை கொள்முதல் விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.