ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்னா சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். தினமும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வீரா என்ற கதாபாத்திரத்தில் நான்கு தங்கைகளில் ஒருவராக தர்ஷூ நடித்து வருகின்றார். இவர் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்துடன் இருந்தே ஆக வேண்டும் என்பதாலும் சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது