மக்களவைத் தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ள அவர், நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகின்றேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியல் களத்தில் இறங்க முடிவு செய்தால் அதை முதலில் உங்களுக்கு தான் அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதை தவிர்க்கவும் என கேட்டுக் கொண்டுள்ளார்.