லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு நயன்தாரா முயற்சியில் இறங்கி உள்ளார். அந்த வகையில் சசிகாந்த் இயக்கத்தில் சித்தார்த், மாதவன் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் திரைப்படத்தை நடித்து இருக்கிறார். இந்த படம் தன்னை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பி உள்ளார்.

மேலும் யோகி பாபுவோடு மண்ணாகட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் நயன்தாரா தன்னுடைய மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை கட்டி வருகிறார்.  அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.