உலகின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ பிரீ பெய்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் திட்டத்தில் சந்தாதாரர்கள் 40 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த கூடுதல் தரவு மூலம் பயனர்கள் ஜியோ சினிமாவில் போட்டிகளில் நேரலை ஸ்ட்ரீம்களை பார்க்கலாம். இல்லையென்றால் தங்களுக்கு பிடித்த தொடர்கள் மற்றும் திரைப்படங்களை அதிகம் பார்க்கலாம்.

சமீபத்தில் ஜியோ சில கிரிக்கெட் திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில் இந்த திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா மற்றும் தடையற்ற ஸ்ட்ரீமிங் அனுபவத்தை உறுதி செய்ய கூடுதல் இலவச டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் விலை 219, 399 மற்றும் 999 ரூபாய் ஆகும். மேலும் இந்தத் திட்டத்தில் 40 ஜிபி வரை இலவச டேட்டா மற்றும் அழைப்பு எஸ்எம்எஸ் மற்றும் பிற நன்மைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.