Jio சினிமாவில் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வாய்ப்பு வழங்கியதன் மூலம் அதன் முக்கிய போட்டியாளரான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்கு ஜியோ பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.அதாவது இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மட்டும் ஹாட் ஸ்டார் 46 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஜியோ சினிமா தானாம். அதிக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த செயலி மற்றும் இணையதளம் மூலம் ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்த்து வருகின்றனர். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பை ஜியோ வழங்கியதன் காரணமாக hotstar பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.