கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD AI- யை இந்தியா உட்பட 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த கோளாறுகள் அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு பழைய நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில் Chat GPT தொழில்நுட்பத்திற்கு போட்டியாக மீண்டும் தற்போது AI களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.