ஜியோ புதிய போஸ்ட் பெய்டு குடும்பத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 399 ரூபாய் செலுத்தினால் முதல் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஃபேமிலி திட்டத்தில் ஜியோ இணைப்பை பெற்றவர்களுக்கு ஒரு மாத ஜயோ ப்ளஸ் சந்தா இலவசம். கூடுதலாக இதில் மூன்று இணைப்புகளையும் சேர்த்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு கூடுதல் இணைப்பிற்கும் 99 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். மொத்தமாக பார்த்தால் 696 ரூபாய் செலுத்தி அதிகபட்சமாக நான்கு இணைப்புகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

75 ஜிபி டேட்டா இருக்கும். ஒரே சிம்மில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 124 ரூபாய் செலவழிக்க வேண்டும். இவை மார்ச் 22 முதல் அமலுக்கு வரும். 399 ரூபாய் திட்டத்திற்கு 500 ரூபாய் மற்றும் 699 ரூபாய் திட்டத்திற்கு 875 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. 699 ரூபாய் திட்டத்தில் ப்ரைம் மற்றும் netflix இலவசமாக பெறலாம் பார்க்கலாம்.