பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 2024-ம் ஆண்டுக்குள் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது. அமேசான் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் பிறவற்றுடன் சேர்ந்து உலக அளவில் பிராட்பேண்ட் இணையத்தை வழங்க தயாராக இருக்கிறது. இந்த வருடத்தில் அமேசான் நிறுவனம் செயற்கைக்கோள்களை தயாரிக்க தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டேவ் லிம்ப் 2024-ம் ஆண்டுக்குள் அமேசான் நிறுவனம் விண்ணில் செயற்கை கோள்களை ஏவும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு 2026-ம் 3,236 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவோம் என்றும் ஒரு நாளைக்கு 3 முதல் 5 செயற்கைக்கோள்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். மேலும் விண்வெளி நிறுவனமான ஸ்டார்லிங் ஏற்கனவே விண்வெளியில் சுமார் 4000 செயற்கை கோள்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.