இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி அடைந்து விட்டது. அதனால் பெரும்பாலும் அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்து கொண்டே எளிதில் முடித்து விடுகிறோம். இது ஒரு பக்கம் நன்மை தருவதாக இருந்தாலும் மறுபக்கம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களை வெறும் ஃபோன் நம்பரை மட்டுமே வைத்து ஹேக் செய்யலாம் என கூகுள் கண்டுபிடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சார்பில் ப்ராஜெக்ட் ஜீரோ என்ற ஆய்வு நடத்தப்படுகிறது. அதில் போன் நம்பரை மட்டும் வைத்துக்கொண்டு ஹேக்கர் ஒருவர் வெகு தூரத்தில் இருந்தே உங்கள் போனின் தகவல்களை திருட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை samsung Exynos சிப்களில் தான் காணப்படுகிறது