தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் எட்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறையை மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.